×

பாடல் பாடிய தந்தை மரணம் – மறைத்து நடந்த மகள் திருமணம்

தனது தந்தை மாரடைப்பில் இறந்தது தெரியாமலேயே மகளின் திருமணம் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள் மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்துவந்தவர் விஷ்ணுபிரசாத். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரின் மகள் ஆர்ச்சாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் விமர்சையாக நடந்தன. மகளின் திருமணத்திற்காக இசைக்கச்சேரியையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரும் நன்றாக பாடக்கூடியவர் என்பதால், நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மேடையில் ஓரு பாடலை பாடிக்கொண்டிருந்தார்.
 
பாடல் பாடிய தந்தை மரணம் – மறைத்து நடந்த மகள் திருமணம்

தனது தந்தை மாரடைப்பில் இறந்தது தெரியாமலேயே மகளின் திருமணம் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள் மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்துவந்தவர் விஷ்ணுபிரசாத். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரின் மகள் ஆர்ச்சாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் விமர்சையாக நடந்தன.

மகளின் திருமணத்திற்காக இசைக்கச்சேரியையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரும் நன்றாக பாடக்கூடியவர் என்பதால், நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மேடையில் ஓரு பாடலை பாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சரிந்து கீழே விழுந்தார். இதைக்கண்டு அவரின் மகளும், மருமகனும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், நிகழ்ச்சி தொடரட்டும். நாங்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம் எனக்கூறை உறவினர்கள் விஷ்ணுபிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த தகவலை திருமண வீட்டில் யாரிடமும் கூறமால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது காலையில் திருமணத்தில் கலந்து கொள்வார் என அவரின் மகளிடம் உறவினர்கள் கூறிவிட்டனர். காலையில் திருமண ஏற்பாடுகள் நடந்து முடிந்தன. தன் தந்தை வந்துவிடுவார் என வாசலையே பார்த்து அவரது மகள் ஏமாற்றம் அடைந்தார். திருமணம் முடிந்த பின்னரே அவர் தந்தை இறந்த செய்தியை அவரிடம் உறவினர்கள் கூறினர்.

அப்போது, அவரும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News