×

நித்தியானந்தா மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி பேட்டி

நித்தியானந்தா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்புகள் ஆகியவற்றில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா. சமீபத்தில் குஜராத்தில் செயல்பட்டு வந்த அவரின் ஆசிரம் இழுத்து மூடப்பட்டது. விசாரணைக்காக போலீசார் அவரை தேடிய போது அவர் எங்கிருக்கிறார் என்பதையே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வாடர் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாஷ் நாடு’ என நித்தியானந்தா பிரகடனம் செய்துள்ளார். மேலும்,
 
நித்தியானந்தா மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி பேட்டி

நித்தியானந்தா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்புகள் ஆகியவற்றில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா.

சமீபத்தில் குஜராத்தில் செயல்பட்டு வந்த அவரின் ஆசிரம் இழுத்து மூடப்பட்டது. விசாரணைக்காக போலீசார் அவரை தேடிய போது அவர் எங்கிருக்கிறார் என்பதையே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வாடர் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாஷ் நாடு’ என நித்தியானந்தா பிரகடனம் செய்துள்ளார். மேலும், அந்நாட்டிற்கான மொழி, கொடி, சின்னம் உள்ளிட்ட அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நித்யானந்தாவுக்கு அடைக்கலமோ அல்லது சொந்த நிலம் வாங்க அனுமதியோ கொடுக்கப்படவில்லை என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், நித்தியானந்தா எங்கிருக்கிறார் என டிச 12ம் தேதிக்குள் அறிக்கை தரவேண்டும் என கர்நாடக அரசை அம்மாநில உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தரவேணும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News