×

ஆட்டோவில் ஏற்றிய சூட்கேஸில் துர்நாற்றம்… சந்தேகம் அடைந்த ஓட்டுனர் –தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம் !

மும்பையில் பெற்ற மகளை வெட்டி துண்டு துண்டாக்கி ஆட்டோவில் பார்சலாக ஏற்றிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜானுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் திவாரி. இவருக்கு 4 மகள்கள். மும்பையில் வேலை செய்யும் இவருடன் மூத்த மகள் பிரின்ஸியும் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரின்ஸி தன்னுடன் பணிபுரியும் ஒருவரைக் காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திவாரி தன் மகளை காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கு பிரின்ஸி ஒத்துக்கொள்ளாததால் அவரைக் கத்தியால் குத்திக் கொலை
 
ஆட்டோவில் ஏற்றிய சூட்கேஸில் துர்நாற்றம்… சந்தேகம் அடைந்த ஓட்டுனர் –தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம் !

மும்பையில் பெற்ற மகளை வெட்டி துண்டு துண்டாக்கி ஆட்டோவில் பார்சலாக ஏற்றிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜானுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் திவாரி. இவருக்கு 4 மகள்கள். மும்பையில் வேலை செய்யும் இவருடன் மூத்த மகள் பிரின்ஸியும் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரின்ஸி தன்னுடன் பணிபுரியும் ஒருவரைக் காதலித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திவாரி தன் மகளை காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கு பிரின்ஸி ஒத்துக்கொள்ளாததால் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அதை ஒரு சூட்கேஸில் பார்சலாகக் கட்டி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீச ஆட்டோ ஓட்டுனர் அதுபற்றிக் கேட்க, பார்சலை பாதி வழியிலேயே தூக்கி எறிந்துவிட்டு அவர் தப்பித்துள்ளார்.

அதன் பின் ஆட்டோ ஓட்டுனர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் அரவிந்த் திவாரியை கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News