×

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

கடன் கேட்ட தாய்க்கு, கடன் தர மறுத்ததால் டியூஷன் டீச்சரை 12 வயது சிறுவன் குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கோவந்தியில் 30 வயதான ஆயிஷா அஸ்லம் என்பவர் டியூஷன் நடத்தி வருகிறார். இந்த டியூஷனின் 12 வயது சிறுவன் இருவன் படித்து வந்துள்ளான். இந்த சிறுவனின் தாயார் டியூஷன் டீச்சரிடம் கடன் கேட்டதாக தெரிகிறது. ஆனால், டீச்சரோ கடன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை
 
கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

கடன் கேட்ட தாய்க்கு, கடன் தர மறுத்ததால் டியூஷன் டீச்சரை 12 வயது சிறுவன் குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கோவந்தியில் 30 வயதான ஆயிஷா அஸ்லம் என்பவர் டியூஷன் நடத்தி வருகிறார். இந்த டியூஷனின் 12 வயது சிறுவன் இருவன் படித்து வந்துள்ளான். இந்த சிறுவனின் தாயார் டியூஷன் டீச்சரிடம் கடன் கேட்டதாக தெரிகிறது.

ஆனால், டீச்சரோ கடன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கோபத்தில் கடன் தர மறுத்த டீச்சரை கத்தியால் குத்தியுள்ளான். ரத்த வெள்ளத்தில் சரிந்த டீச்சரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால் அந்த சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News