×

தமிழிசையிடம் தெலங்கானா முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக ஆவேசம் !

தெலங்கானா ஆளுநராக பதவியேற்று இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் தெலங்கானா முதல்வர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென தெலங்கானா பாஜக வற்புறுத்தியுள்ளது. தெலங்கானா ஆளுநரக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் செப் 8 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். ஆனால் அன்று அன்றைய தினமே முதல்வர் சந்திரசேகர ராவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான வனம் நரசிம்ம ராவ் ஆளுனர் நியமனத்தில் மத்திய அரசு தலையீடு உள்ளது என்றும் மாநில
 
தமிழிசையிடம் தெலங்கானா முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக ஆவேசம் !

தெலங்கானா ஆளுநராக பதவியேற்று இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் தெலங்கானா முதல்வர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென தெலங்கானா பாஜக வற்புறுத்தியுள்ளது.

தெலங்கானா ஆளுநரக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் செப் 8 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். ஆனால் அன்று அன்றைய தினமே முதல்வர் சந்திரசேகர ராவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான வனம் நரசிம்ம ராவ் ஆளுனர் நியமனத்தில் மத்திய அரசு தலையீடு உள்ளது என்றும் மாநில அரசின் செயல்பாடுகளில் இவ்வாறு குறுக்கிடுகிறது என்றும் எழுதியிருந்தார்.

இதற்கு தெலங்கானா மாநில பாஜகவினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மாநில அரசிடம் சம்பளம் பெறும் ஒருவர் இது போல பேசுவது கேள்விக்குறியது. இது புதிதாக பதவியேற்றுள்ள ஆளுநரை அவமதிப்பது போலாகும் எனக் கூறியுள்ளனர். இதனால் தெலங்கானா முதல்வர் ஆளுநரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News