×

18 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எடுக்கும் முதல் விடுமுறை – பியர் கிர்ல்ஸிடம் பகிர்ந்து கொண்ட மோடி

டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் செய்யும் சாகசப் பயண நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நேற்று ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சியின் எபிசோடில் இந்திய பிரதமர் மோடிக் கலந்து கொண்டா. இதற்கான முன்னோட்டங்கள் முன்பே வெளியாகி எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தன. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்தியாவின் வட துருவமான இமயமலைக்கு அருகில் உள்ள உத்தரகாண்ட்
 
18 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எடுக்கும் முதல் விடுமுறை – பியர் கிர்ல்ஸிடம் பகிர்ந்து கொண்ட மோடி

டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் செய்யும் சாகசப் பயண நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நேற்று ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சியின் எபிசோடில் இந்திய பிரதமர் மோடிக் கலந்து கொண்டா. இதற்கான முன்னோட்டங்கள் முன்பே வெளியாகி எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தன. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

இந்தியாவின் வட துருவமான இமயமலைக்கு அருகில் உள்ள உத்தரகாண்ட் ஜிம் கார்பெட் வன உயிரியல் பூங்காவுக்கு பியர் கிரில்ஸ் நடந்தே வர அதன்பின் அவருடன் இணைந்து கொண்டார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் தனது அரசியல் வாழ்க்கை, குடும்ப சூழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் மோடி. அதில் முக்கியமாக  , ‘எனது 17ஆவது வயதில் வாழ்க்கையின் தேடலுக்காக இமயமலைக்கு முதல் முறையாக வந்தேன். அதன் பின் பல முறை மீண்டும் மீண்டும் வந்துள்ளேன். பல சாதுக்கள் மற்றும் ஞானிக்களை இங்கு சந்தித்துள்ளேன்.  அதன் பின் குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகளும், இந்தியாவின் பிரதமராக 5 ஆண்டுகளும் இருந்துள்ளேன். அப்போது என்னெல்லாம் இங்கு வர இயலவில்லை. ஆனால் இன்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குப் பிடித்த இடங்களுக்கு வந்துள்ளேன். 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இது’ என நெகிழ்ச்சியாகக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News