×

105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி !

கேரளாவைச் சேர்ந்த 105 வயது பாட்டி ஒருவர் நான்காம் வகுப்புத் தேர்வெழுதியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாகிரதி அம்மாள். சிறுவயதிலேயே குடும்ப சூழல் காரணமாக மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்துவிட்டு அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவரால் படிப்பைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது. தற்போது அவருக்கு 105 வயது ஆகிறது. அவருக்கு 16 பேரன், பேத்திகள் உள்ளனர். பேரக்குழந்தைகள் பாட்டியிடம் உங்களுக்கு ஏதாவது ஆசை எதாவது இருக்கிறதா
 
105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி !

கேரளாவைச் சேர்ந்த 105 வயது பாட்டி ஒருவர் நான்காம் வகுப்புத் தேர்வெழுதியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாகிரதி அம்மாள். சிறுவயதிலேயே குடும்ப சூழல் காரணமாக மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்துவிட்டு அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவரால் படிப்பைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தற்போது அவருக்கு 105 வயது ஆகிறது. அவருக்கு 16 பேரன், பேத்திகள் உள்ளனர். பேரக்குழந்தைகள் பாட்டியிடம் உங்களுக்கு ஏதாவது ஆசை எதாவது இருக்கிறதா ?எனக் கேட்டதற்கு தான் படிக்கவேண்டும் என சொல்லியுள்ளார். அதை நிறைவேற்றும் விதமாக கேரள அரசின் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் படிப்பை தொடர ஏற்பாடு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம்  தேர்வுகளில் கலந்துகொண்டு நான்காம் வகுப்புக்கான தேர்வுகளை அவர் எழுதினார். இதற்கு முன்னதாக 96 வயது மூதாட்டி ஒருவர் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் தேர்வு எழுதியது கேரளாவில் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News