×

2000 ரூபாய் நோட்டின் விலை ரூ3.53 – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் !

பணமதிப்பிழப்புக்கு பிறகு அச்சடிக்கப்பட்டு வரும் 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியாகின. இந்த புதிய நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவு ஆகிறது என்பது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 2000 ரூ நோட்டுகளை அச்சடிக்க 2017-18
 
2000 ரூபாய் நோட்டின் விலை ரூ3.53 – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் !

பணமதிப்பிழப்புக்கு பிறகு அச்சடிக்கப்பட்டு வரும் 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியாகின. இந்த புதிய நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவு ஆகிறது என்பது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

2000 ரூ நோட்டுகளை அச்சடிக்க 2017-18 நிதியாண்டில் ரூ.4.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த 2018-19 நிதியாண்டில் அது ரூ.3.53 ஆகக் குறைந்துள்ளது. அதேப்போல 200 ரூபாய் நோட்டு ஒன்றுக்கு ரூ.2.24 இருந்த விலை 2018-19ஆம் ஆண்டில் அது ரூ.2.15 ஆகக் குறைந்துள்ளது. இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் அச்சிடப்படுகின்றன.

மற்றொரு நிறுவனமான செக்யூரிட்டி பிரின்டிங் & மானிடரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 500 ரூ நோட்டுகளை ரூ.3.37 க்கு அச்சடித்து வெளியிடுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News