×

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாகவும், தனது நாட்டிற்க்கு குடியுரிமை பெற சுமார் 12 லட்சம் பேர் விண்னத்திருப்பதாகவும் கூறி நித்தியானாந்தா பரபரப்பை கிளப்பியுள்ளார். பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்நாட்டிற்கு கைலாச நாடு எனவும் பெயர் வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டது. தற்போது அவர் எங்கே
 
பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாகவும், தனது நாட்டிற்க்கு குடியுரிமை பெற சுமார் 12 லட்சம் பேர் விண்னத்திருப்பதாகவும் கூறி நித்தியானாந்தா பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்நாட்டிற்கு கைலாச நாடு எனவும் பெயர் வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டது.

தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் கர்நாடக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முகநூல் மூலம் அவரின் சீடர்களிடம் பேசிய அவர் கைலாச நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாகவும், தனக்கு பல நாடுகளிலிருந்து அழைப்பு வருவதால், விரைவில் ஒரு நாட்டில் ஸ்ரீகைலாசா தேசத்தை அமைப்போம் எனவும் பேசினார். மேலும், இதுவரை 12 லட்சம் பேர் தன் நாட்டிற்கு விண்ணப்பித்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

போலீசார் அவரை தேடி வரும் வேளையில் அவரின் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News