×

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

இந்தியா முழுவதும் வங்கிகள் இயங்கும் நேரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Public sector Banking hours is set right today – இந்தியாவில் பல பொதுத்துறை வங்கிகள் செயல்படுகிறது. தங்களின் வசதிக்கேற்ப குறிப்பாக காலை 9 மணி முதல் 10.30 மணிவரை ஓவ்வொரு வங்கியும் தங்களின் பணி நேரங்களை அமைத்துக் கொள்கின்றன. இதனால் வாடிக்கையாளர் சிரமத்திற்கு ஆளவதாக புகார்கள் எழுந்தது. விரைவில் சென்றுவிட்டாலும் நீண்ட நேரங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதேபோல், மாலை வங்கி பணி முடியும்
 
பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்
இந்தியா முழுவதும் வங்கிகள் இயங்கும் நேரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Public sector Banking hours is set right today – இந்தியாவில் பல பொதுத்துறை வங்கிகள் செயல்படுகிறது. தங்களின் வசதிக்கேற்ப குறிப்பாக காலை 9 மணி முதல் 10.30 மணிவரை ஓவ்வொரு வங்கியும் தங்களின் பணி நேரங்களை அமைத்துக் கொள்கின்றன. இதனால் வாடிக்கையாளர் சிரமத்திற்கு ஆளவதாக புகார்கள் எழுந்தது. விரைவில் சென்றுவிட்டாலும் நீண்ட நேரங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதேபோல், மாலை வங்கி பணி முடியும் நேரத்தில் செல்வதால் அந்த பணி நடைபெற முடியாமல் போவதோடு, அடுத்த நாள் மீண்டும் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இருக்காது – ஆய்வில் அதிர்ச்சி

இந்நிலையில், இன்று அமுலாகியுள்ள புதிய நேர முறைப்படி காலை 10 மணிக்கு வங்கிகள் தங்களின் பணிகளை தொடங்கும். அதேபோல் மாலை 4 மணியளவில் பணி நேரம் முடிவடையும். பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிவரை உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டும் காலை 9 மணி முதல் 3 மணி வரை வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News