×

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் – பிஹார் போலிஸ் தகவல் !

பிரதமருக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தில் 49 கலைஞர்கள் மேல் தொடுக்கப்பட்ட தேசதுரோக வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதி கடிதம் ஒன்றில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் நடக்கும் குழு வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்து உடனடியாக பிரதமர் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நாட்டின் பெயரைக் கெடுக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டதாகக்
 
மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் – பிஹார் போலிஸ் தகவல் !

பிரதமருக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தில் 49 கலைஞர்கள் மேல் தொடுக்கப்பட்ட தேசதுரோக வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதி கடிதம் ஒன்றில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் நடக்கும் குழு வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்து உடனடியாக பிரதமர் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாட்டின் பெயரைக் கெடுக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டதாகக் கூறி பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்ற வழக்கறிஞர் தேசத்துரோக வழக்கு தொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழ வழக்கை வாபஸ் பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை பீஹார் காவல்துறையும் உறுதி செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News