×

சபரிமலையில் இரு பெண்கள் தரிசனம் – மூடப்பட்ட கோவில்

பல்வேறு சர்ச்சைகள்,போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி இரு பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்ட நிலையில் கோவில் நடை தற்போது சாத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனாலும், அதை சில கும்பல் ஏற்காமல் அங்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சில பெண்கள் அங்கு செல்ல முயல்வதும், ஒரு பிரிவினர் எதிர்ப்பு
 
சபரிமலையில் இரு பெண்கள் தரிசனம் – மூடப்பட்ட கோவில்

பல்வேறு சர்ச்சைகள்,போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி இரு பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்ட நிலையில் கோவில் நடை தற்போது சாத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனாலும், அதை சில கும்பல் ஏற்காமல் அங்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சில பெண்கள் அங்கு செல்ல முயல்வதும், ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், பாதுகப்பு காரணம் கூறி போலீசார் அந்த பெண்களை திருப்பி அனுப்புவதும் அங்கு வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், பலத்தை எதிர்ப்புகளையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் பின்புறம் வழியாக இரு பெண்கள் நேற்று இரவு சபரிமலை கோவிலில் தரிசனம் செய்து விட்டனர்.

இந்த விவகாரம் சர்ச்சையையும் ஆக தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை அங்கு கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

சபரிமலையில் பலத்தை எதிர்ப்புகளையும் மீறி 2 பெண்கள் தரிசனம் செய்து விட்டது, அதை ஆதரிக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News