×

நீங்கள் என்ன கழுதை மேய்த்தீர்களா? சந்திரபாபு நாயுடுவிடம் எகிறிய ஜகன்மோகன் ரெட்டி

Chandrababu Naidu – தன்னை யாரும் இவ்வளவு கேவலமாக பேசியதில்லை என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு ‘ நேற்று சட்டசபையில் ஜெகன் மோகன் ரெட்டி பொய்களை கூறி சவால் விடுகிறார். வறட்சியை பற்றி பேசுங்கள் என்றால் அவர் வேறு ஏதேதோ பேசுகிறார். தெலுங்கு தேசம் கட்சியை பற்றியும் என்னை பற்றியும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். நான் 35 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இப்படி
 
நீங்கள் என்ன கழுதை மேய்த்தீர்களா? சந்திரபாபு நாயுடுவிடம் எகிறிய ஜகன்மோகன் ரெட்டி

Chandrababu Naidu – தன்னை யாரும் இவ்வளவு கேவலமாக பேசியதில்லை என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு ‘ நேற்று சட்டசபையில் ஜெகன் மோகன் ரெட்டி பொய்களை கூறி சவால் விடுகிறார். வறட்சியை பற்றி பேசுங்கள் என்றால் அவர் வேறு ஏதேதோ பேசுகிறார். தெலுங்கு தேசம் கட்சியை பற்றியும் என்னை பற்றியும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். நான் 35 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இப்படி ஒரு அவல நிலையை சந்திக்கவில்லை.

தெலுங்கானவில் அணைகள் கட்டப்படுவது பற்றி கேட்டால், நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்திர்களா என கேட்கிறார். வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என ஜெகன் கூறுகிறார். ஆனால், யாருக்கு வழங்குவார்கள் என்பதில் தெளிவான பதில் இல்லை. அவருக்கு எந்தவித ஞானமும் இல்லை. அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்’ என அவர் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News