×

மொத்த காசும் போச்சு!… பீட்சா ஆர்டர் செய்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…

பெங்களூரில் ஆன்லைனில் பீசா ஆர்டர் செய்து தனது மொத்த பணத்தையும் இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரில் ஐடி ஊழியராக பணிபுரியும் ஷேக் என்பவர் சமீபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஒரு பிரபல நிறுவனத்தின் ஆப்பில் பீசா ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால், ஒரு மணிநேரமாகியும் அவருக்கு பீசா டெலிவரி செய்யப்படவில்லை. எனவே, இணையத்தில் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தேடி ஒரு நபரிடம் பேசியுள்ளார். அப்போது, உங்களின் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, உங்கள் பணம்
 
மொத்த காசும் போச்சு!… பீட்சா ஆர்டர் செய்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…

பெங்களூரில் ஆன்லைனில் பீசா ஆர்டர் செய்து தனது மொத்த பணத்தையும் இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரில் ஐடி ஊழியராக பணிபுரியும் ஷேக் என்பவர் சமீபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஒரு பிரபல நிறுவனத்தின் ஆப்பில் பீசா ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால், ஒரு மணிநேரமாகியும் அவருக்கு பீசா டெலிவரி செய்யப்படவில்லை.

எனவே, இணையத்தில் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தேடி ஒரு நபரிடம் பேசியுள்ளார். அப்போது, உங்களின் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, உங்கள் பணம் திருப்பி தரப்படும் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி அதில் அவரின் வங்கி கணக்கு விபரத்தை தரவேண்டும் எனகூறியுள்ளார்.

ஷேக்கும் அதுபோல் செய்துள்ளார். சிறுதி நேரத்தில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் தாயின் புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை யாரோ தன்னை ஏமாற்றி பறித்துவிட்டதை உணர்ந்த அவர் இதுபற்றி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆப் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் கொடுக்கும் போது சிக்கல் ஏற்பட்டால் இமெயில் மற்றும் ஆப் மூலம் மட்டுமே தங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு கூகுளில் தேடி ஏதோ ஒரு எண்ணில் பேசினால் இப்படி ஏமாற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News