×

அமைச்சரா இருந்தா என்ன? வரிசையில வாங்க – தெறிக்கவிட்ட கல்லூரி மாணவி

M.B. Patil : கோவிலில் அமைச்சரை வரிசையில் வரச்சொன்ன கல்லூரி மாணவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்றது கர்நாடகாவில். கடந்த 4ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு விஜயபுரா மாவட்டத்தில் உள்ள அமரகனாதீஸ்வரா கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடும் வெயிலில் காத்திருந்தனர். அப்போது அங்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் வந்தார். அவர் நேராக சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது, அங்கு
 
அமைச்சரா இருந்தா என்ன? வரிசையில வாங்க – தெறிக்கவிட்ட கல்லூரி மாணவி

M.B. Patil : கோவிலில் அமைச்சரை வரிசையில் வரச்சொன்ன கல்லூரி மாணவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் நடைபெற்றது கர்நாடகாவில். கடந்த 4ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு விஜயபுரா மாவட்டத்தில் உள்ள அமரகனாதீஸ்வரா கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடும் வெயிலில் காத்திருந்தனர். அப்போது அங்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் வந்தார். அவர் நேராக சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.

அமைச்சரா இருந்தா என்ன? வரிசையில வாங்க – தெறிக்கவிட்ட கல்லூரி மாணவி

அப்போது, அங்கு வரிசையில் நின்றிருந்த ஒரு கல்லூரிப் பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் வெயிலில் நிற்கும் போது அமைச்சர் மட்டும் உடனே தரிசனம் செய்வாரா? என எதிர்ப்பு தெரிவித்தார். அப்பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த பாட்டீல் ‘ நானும் வரிசையில் நிற்கவே விரும்புகிறேன். ஆனால், 2 நிகழ்ச்சிகளில் உடனடியாக கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், ஹூப்பள்ளி விமான நிலையத்திற்கு செல்லவேண்டியிருக்கிறது” என அப்பெண்ணிடம் அவர் விளக்கம் அளித்தார்.

அதை அப்பெண்ணும் ஏற்றுக்கொண்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விவகாரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்துள்ள பாட்டீல், அமைச்சரை பார்த்து விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறிய அந்த தைரியமான பெண்ணை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரா இருந்தா என்ன? வரிசையில வாங்க – தெறிக்கவிட்ட கல்லூரி மாணவி

From around the web

Trending Videos

Tamilnadu News