×

எதனால்?.. எப்படி என் கவுண்டர் நடந்தது? – காவல் ஆணையர் விளக்கம்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது எப்படி என காவல் ஆணையர் செய்தியாளர்கள் முன்பு சஜ்ஜனார் விளக்கம் அளித்தார். ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால்,
 
எதனால்?.. எப்படி என் கவுண்டர் நடந்தது? – காவல் ஆணையர் விளக்கம்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது எப்படி என காவல் ஆணையர் செய்தியாளர்கள் முன்பு சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.

ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. ஆணையர் சஜ்ஜனார் இந்த என்கவுண்டரை நடத்தியதாக கூறப்படுகிறது.

சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்து ஒருபுறம் இருந்தாலும் இதற்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

எதனால்?.. எப்படி என் கவுண்டர் நடந்தது? – காவல் ஆணையர் விளக்கம்

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்கள் முன்பு விளக்கம் அளித்த சஜ்ஜனார் ‘அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள்தான் பெண் மருத்துவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட சில உடைமைகளை அவர்கள் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். எனவே, அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தோம். அதேபோல், குற்றத்தை எப்படி செய்தோம் என அவர்கள் நடித்துக்காட்டவும் அழைத்து வந்தோம்.

அப்போது சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி எங்களை நோக்கி சுட்டனர். மேலும், 4 பேரும் சேர்ந்து கொண்டு எங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். எனவே, அவர்கள் 4 பேரையும் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காலை 5.45 மணிமுதல் 6.15 மணிக்குள் என்கவுண்டர் நடந்தது’ எனத் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு காரணம் கருதி பகலில் அவர்கள் அழைத்து வரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News