×

ராகுல் பதவி விலகுவாரா ? – நடிகை கஸ்தூரி கேள்வி !

தேர்தலின் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவாரா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக தனிப்பெரும்பாண்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வடமாநிலங்கள் பலவற்றில் காங்கிரஸ்
 
ராகுல் பதவி விலகுவாரா ? – நடிகை கஸ்தூரி கேள்வி !

தேர்தலின் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவாரா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக தனிப்பெரும்பாண்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

வடமாநிலங்கள் பலவற்றில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியாக பொறுப்பேற்பதற்கு தேவையான 55 தொகுதிகளைக் கூட பெறாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. காங்கிரஸின் தோல்விக்குப் பலவிதமான காரணங்கள் மற்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் ‘காங்கிரஸின் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் பதவி விலகியுள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய நேர்மை மற்றும் சுய மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி இப்போது என்ன செய்யப்போகிறார். காங்கிரஸின் இன்னும் பல மாநிலத் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News