×

பிரவசமான 5 நாளில் பெண் உயிரிழப்பு – வயிற்றுக்குள் இருந்த பஞ்சுத்துணி !

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் பிரசவம் ஆன ஐந்தே நாளில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தனுஸ்ரீ என்ற பெண் தனது பிரசவத்துக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல, அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் யாரும் இல்லை. விசாரித்தபோது மருத்துவர் தனியாக க்ளீனிக் நடத்துவதாக சொல்லியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தனுஸ்ரீ மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு நீர்ச்சத்துக் குறைவாக இருப்பதாகவும் அதனால்
 
பிரவசமான 5 நாளில் பெண் உயிரிழப்பு – வயிற்றுக்குள் இருந்த பஞ்சுத்துணி !

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் பிரசவம் ஆன ஐந்தே நாளில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தனுஸ்ரீ என்ற பெண் தனது பிரசவத்துக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல, அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் யாரும் இல்லை. விசாரித்தபோது மருத்துவர் தனியாக க்ளீனிக் நடத்துவதாக சொல்லியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தனுஸ்ரீ மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு நீர்ச்சத்துக் குறைவாக இருப்பதாகவும் அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன்படியே அறுவை சிகிச்சையின் ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார் தனுஸ்ரீ. ஆனால் பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட தொடர் வயிற்று வலியால் அவர் 5 நாட்களில் உயிரிழந்துள்ளார்.

அவரது பிரேதப் பரிசோதனையின் போது அவரது வயிற்றில் பஞ்சுத்துணிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்டுள்ளது. இது அறுவை சிகிச்சையின் போது துடைப்பதற்குப் பயன்படுத்தக் கூடியதாகும். மருத்துவர்களின் கவனக்குறைவால் ஒரு பெண்ணின் உயிர் போனது மட்டுமல்லாமல் ஒருக் குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News