×

உங்கள் சட்டம் ­இங்கு பலிக்காது – மோட்டார் வாகன சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு !

மத்திய அரசு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விதிகளை மீறுபவர்கள் மேல் அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அதிக அபராதத் தொகையால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சென்ற வாரம் லாரி உரிமையாளர் ஒருவர் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தியதும் லுங்கி அணிந்து ஆட்டோ ஓட்டியவருக்கு 2000 ரூ அபராதம் விதித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து நேற்று ஒருவர் 1,41,000 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட லாரி
 
உங்கள் சட்டம் ­இங்கு பலிக்காது – மோட்டார் வாகன சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு !

மத்திய அரசு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விதிகளை மீறுபவர்கள் மேல் அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அதிக அபராதத் தொகையால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

சென்ற வாரம் லாரி உரிமையாளர் ஒருவர் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தியதும் லுங்கி அணிந்து ஆட்டோ ஓட்டியவருக்கு 2000 ரூ அபராதம் விதித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து நேற்று ஒருவர் 1,41,000 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர் விதிமுறைகளுக்கு மீறி அதிகளவில் பொருட்களை ஏற்றியதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சட்டத்துக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

இதனையடுத்து மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையை திணிப்பதாகும். மேற்கு வங்கத்தில்  ஏற்கெனவே அமலில் உள்ள ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்படும்’ எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News