×

மின்கட்டண விவகாரம்: நடிகர் பிரசன்னாவுக்கு ஆதரவாக மு.கஸ்டாலின் கருத்து!

அண்மையில் நடிகர் பிரசன்னா  தனது டுவிட்டரில் மின்வாரியத்தின் மின் கணக்கெடுப்பு குறித்தும் கட்டணம் அதிகம் வசூலிப்பதாவதும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதையடுத்து மின்வாரியம் பிரசன்னாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மார்ச் மாத மின்கட்டணத்தை செலுத்தவில்லை அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தனர்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரசன்னாவுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர் கட்சியை சாடியிருக்கிறார். அவர் கூறியதாவது, மின் கட்டணம் குறித்து நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியதற்கு  முறையாக பதிலளிக்காமல், பழிவாங்கும் வகையில் அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து அரசியல் ரீதியான அறிக்கையை விளக்கமாக கொடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது,

அத்துடன் பொது மக்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது என்றும், முந்தைய மாத கட்டணங்களை "பேரிடர் நிவாரணமாக" அறிவித்து இன்னும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News