×

அட்மின் மீது பழி போடுவதுதான் ஆண்மையா?.. ராஜாவுக்கு ஜெயக்குமார் பதிலடி....

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்திருக்கும் நிலையில் வினாநயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்பு என்கிற பெயரில் பாஜகவின் பேரணி செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இது தவறு என ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
 

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ரஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கர்நாடகாவில் வினாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என பதிவிட்டது அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிவிட்டரில்  எதிர்வினையாற்ற, சமூகவலைத்தளங்களில் அதிமுக - பாஜக மோதல் கருத்து மோதல் எழுந்துள்ளது.

அதிமுக தொழில்நுட்ப துறை சார்பாக போடப்பட்ட டிவிட்டில் ‘நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் தனிப்பட்ட மதவெறிக்காக எல்லாம் தொற்றுநோய்க்காலத்தில் தமிழக அரசு மக்களைப் பணயம் வைக்காது! வெறும் வாய்ப்பேச்சில் காட்டும் வீரத்தை தமிழ்நாட்டில் தனித்து நின்று டெபாசிட்டாவது வாங்கி தங்கள் ஆண்மையை நிரூபிக்கவேண்டும்!’ என பதிவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுபற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள கருத்தில் ‘ தமிழகத்தில் நடப்பது ஆண்மையான அரசாங்கம் தான்;

ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும்.. ட்விட்டரில் கருத்து தெரிவித்து விட்டு அட்மின் மீது பழி போடுவது தான் ஆண்மையா?

நீதிமன்றம் சென்ற பிறகு மன்னிப்பு கேட்பது தான் ஆண்மை செயலா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவினரை ஹெச்.ராஜா உரசிப் பார்க்கக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து ‘சபாஷ் சரியான போட்டி’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News