×

இவரல்லவோ மனிதநேயர்! ஏழைகளுக்கு பிரகாஷ்ராஜ் செய்த உதவி ; குவியும் பாராட்டு

கொரோனா விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த உதவி நெட்டிசன்களின் பாராட்டை பெற்றது.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றரனர். தமிழகத்தில் 25 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, இன்னும் 21 நாட்களுக்கு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் வீடே இல்லாமல் சாலையோரம் வசித்து வரும் ஏழை தொழிலாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை சமுதாயக்கூடத்தில் தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் அனைவருக்கும் போதிய இடம் இல்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இன்று எனது பிறந்தநாள். சென்னை, பாண்டிச்சேரி, கம்மம் ஆகிய பகுதிகளில் வீடில்லாமல் தவித்து வருபவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தேன். இது அரசின் பொறுப்பு மட்டுமல்ல. நம் பொறுப்பும் கூடத்தான். நாம் மனிதத்தை கொண்டாடுவோம்.  அவர்களின் குடும்பத்தினருடன் பேசினேன். பண உதவியும் செய்தேன். நீங்களும் ஒருவர் அல்லது ஒரு குடும்பத்தினருக்கு உதவுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News