×

மீண்டும் உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த வடகொரியா அதிபர் கிம்-ஜாங் உன்

இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் தற்போது பொதுவெளியில் தலைகாட்டியுள்ளார் வடகொரியா அதிபர் கிம்-ஜாங் உன்.

 

அறிவிப்பின்றி 20 நாட்கள் காணாமல் போனதால், இறந்துவிட்டார் என்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில் மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கியதன் மூலம் பொதுவெளிக்கு வந்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்.

20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது வெளியில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் . நேற்று வெள்ளிக்கிழமையன்று இரசாயானத் தொழிற்சாலை ஒன்றை இன்று ரிப்பன் வெட்டி திறந்துள்ளார் என்று கொரியாவின் மத்திய செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பிறகு கண்ணில் படாமல் மறைந்திருந்தார் கிம்ஜாங் உன்.
அதற்குப் பிறகு ஏராளமான செய்திகள் அவரது உடல்நிலை குறித்தும் உயிர் குறித்தும் வதந்திகளாகப் பரப்பட்டன.

அவர் இறந்துவிட்டார் என்றும் அவருக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வருவார் என்றும் யூகங்கள் ஒருபுறமும், அவரது தங்கை ஆட்சிக்கு வர வாய்ப்பு உண்டு என்று கூடுதல் தகவல்கள் மறுபுறமும் பரவத்தொடங்கின.

இந்நிலையில், அனைத்து யூகங்களையும் உடைக்கும் வகையில் கொரிய செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஆதாரத்துக்காக கிம் ஜாங் உன் ரிப்பன் வெட்டிய படத்தையும் வெளியிட்டுள்ளது.

20 நாட்களாக வான்சன் நகரத்தில் இருந்ததாக பல தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

மேலும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருப்பதாகவும் ஆனால் எழுந்து நிற்கவோ நடமாடவோ முடியாத நிலையில் உள்ளதாகவும் வட கொரியத் தூதரகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News