×

இதெல்லாம் ஓவரா தெரியலை! அதுக்குனு இப்படியா... பாத்து விஜய்க்கு சுட்டிடப்போகுது!

விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துமுடிந்துள்ள நிலையிலும், ட்விட்டரில் ட்ரெண்டிங் முடிந்தபாடில்லை. விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தைப் பற்றியும், இசை வெளியீட்டு விழாவில் நடந்தேறிய சுவாரசியமான விசயங்களையும், மீம்களாகவும், வீடியோக்களாகவும் தயார் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
 

அந்த வகையில் நேற்று இசை வெளியீட்டு விழாவின் போது கையில் சூடம் ஏற்றி, விஜய் வரும்போது டிவிக்கு முன் காட்டிய ரசிகரை பலர் கண்டித்து வருகின்றனர்.

இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் ரசிகர்களை அழைக்கவில்லை. முந்தைய படத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த முறை அதை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இதை மேடையிலேயே தெரிவித்த விஜய், அதற்காக வருத்தப்படுவதாகவும் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News