×

குழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….

நம் வாழ்க்கையில் சில முடிவுகளை எளிதாக எடுக்க முடிவதில்லை. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் “டிலெம்மா” இதுவா அதுவா என்ற நிலை, இரண்டையும் விட்டுக்கொடுக்க விருப்பமில்லை அல்லது இரண்டையும் ஏற்கவும் மனமில்லை. அதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள சில டிப்ஸ். 1. அதிகம் யோசிக்காதீங்க நாம் குழப்ப மனநிலைக்கு செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதிகம் யோசிப்பது. எல்லா செயல்களுக்கும் நல் விளைவுகளும் இருக்கும் தீய விளைவுகளும் இருக்கு நாம எப்போதும் தீய விளைவுகளையே அதிகம் யோசிக்க பழகியுள்ளோம். அதில்
 
குழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….

நம் வாழ்க்கையில் சில முடிவுகளை எளிதாக எடுக்க முடிவதில்லை. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் “டிலெம்மா” இதுவா அதுவா என்ற நிலை, இரண்டையும் விட்டுக்கொடுக்க விருப்பமில்லை அல்லது இரண்டையும் ஏற்கவும் மனமில்லை. அதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள சில டிப்ஸ்.

1. அதிகம் யோசிக்காதீங்க

நாம் குழப்ப மனநிலைக்கு செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதிகம் யோசிப்பது. எல்லா செயல்களுக்கும் நல் விளைவுகளும் இருக்கும் தீய விளைவுகளும் இருக்கு நாம எப்போதும் தீய விளைவுகளையே அதிகம் யோசிக்க பழகியுள்ளோம். அதில் உள்ள நன்மை மட்டும் ஏற்றுகொண்டால் முடிவெடுப்பது எளிதாகும்.

2. கழுகு பார்வை

ஒரு பிரச்சனைக்கு உள்ளே இருந்து யோசிக்கும் போது அதற்கான தீர்வு நமக்கு கிடைப்பதில்லை. அதிலிருந்து விலகி நின்று யோசிக்கும் தீர்வுகள் கிடைக்கும்.

3. மனமே மார்க்கம்

பல தருணங்களில் நம் மனம் நாம் செய்ய வேண்டியதை நம்க்கு உணர்த்தி விடும். நாம் குழம்புவதற்கு காரணம், நம் மனம் சொல்வதை நாம் ஏற்க முடியாததே.

4. வேற செய்ங்க

ஒரு விஷயத்துல குழப்பமா இருந்தா பல நேரங்களில் நாம் அதை குறித்த சிந்தனையில் மூழ்கி இருப்போம். இது குழப்பத்தை இன்னும் அதிகமாக்கி, சரியான முடிவெடுக்க முடியாமல் ஆகிறது. மாற்றாக, சில நேரம், சில நாள் அதை பற்றி சிந்திக்காமல் வேறு வேலைகளில் ஈடுபடும் போது நம் முந்தைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நம்ப முடியவில்லையா ஆனால் பல சந்தர்ப்பங்களில் இதுதான் நிஜம்.

5. துணிந்து செய்தல்

நம் மனதிற்கு பிடித்ததை துணிவுடன் முடிவெடுக்கும் போது குழப்பம் உண்டாவதில்லை, ஆனால் எதிர்காலம், பயம், மனதிற்கு நெருக்கமானவர்களை வைத்து சிந்திக்கும் போது மனம்படி செயல்படுதல் சிக்கல் ஆகிறது. துணிவுடன் முடுவெடுங்கள், எல்லாம் நன்மைக்கே

From around the web

Trending Videos

Tamilnadu News