×

ஒரு தலை காதல்… பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் – இது என்ன சினிமாவா ?

வேலூர் மாவட்டத்தில் தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில் ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனாலும் அதை அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளைப் பார்ப்பதை அறிந்து அவரிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ அவரது காதலை ஏற்கவில்லை. இதனால் ஏமாற்றமடந்த அந்த
 
ஒரு தலை காதல்… பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் – இது என்ன சினிமாவா ?

வேலூர் மாவட்டத்தில் தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில் ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனாலும் அதை அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளைப் பார்ப்பதை அறிந்து அவரிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ அவரது காதலை ஏற்கவில்லை. இதனால் ஏமாற்றமடந்த அந்த இளைஞர் நண்பர்களின் முட்டாள்தனமான யோசனையைக் கேட்டு பேருந்தில் சென்றுகொண்டு இருக்கும் போது அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். இதனால் அந்த கோபத்தில் கத்த பஸ்ஸில் இருந்த பயணிகள் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவது போல தாலி கட்டிவிட்டால் பெண் தன்னையே கல்யாணம் செய்துகொள்வார் என்று நினைத்த இளைஞர் இப்போது காவல்நிலையத்தில் உடகார வைக்கப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News