×

ஒரு கொலை… இரண்டு தற்கொலைகள் ? – கேரளா லாட்ஜில் மர்ம மரணங்கள்

கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவரும் கேரளாவின் தேக்கடிப் பகுதியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முனைப்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத்தின் தாயார் ஷோபனா ஆகியோர் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்நிலையில் நிலம் வாங்குவது தொடர்பாக ஜீவாவுக்கும் பிரமோத்துக்கும்,
 
ஒரு கொலை… இரண்டு தற்கொலைகள் ? – கேரளா லாட்ஜில் மர்ம மரணங்கள்

கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இவர்கள் இருவரும் கேரளாவின் தேக்கடிப் பகுதியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முனைப்பில் இருந்துள்ளனர். இது  தொடர்பாக பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத்தின் தாயார் ஷோபனா ஆகியோர் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நிலம் வாங்குவது தொடர்பாக ஜீவாவுக்கும் பிரமோத்துக்கும், ஷோபனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து சம்பவ தினத்தன்று மூவருமே அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகப்பட்டு லாட்ஜ் ஊழியர்கள் தங்களிடம் இருந்த சாவியைப் போட்டு அறைக்கதவை திறந்து பார்த்தபோது ஜீவா கட்டிலில் சடலமாகவும், பிரமோத்தும் அவரது தாயாரும் தூக்கில் தொங்கியபடியும் சடலமாகக் கிடந்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக போலிஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மூன்று சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவாவை பிரமோத்தும் அவரது தாயும் சேர்ந்து கொன்றுவிட்டு அதன் பின் பயத்தில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News