×

அஜித்தை கிண்டலடித்து எழுதப்பட்ட வசனம் – பேச மறுத்த நடிகர் விஜய்

Actor vijay and Ajith – அஜித்தை கிண்டலடிப்பது போல எழுதப்பட்ட வசனத்தை நடிகர் விஜய் பேச மறுத்த விவகாரம் தெரியவந்துள்ளது. சமகாலத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் விஜய் மற்றும் அஜித். திரைத்துறையில் இருவருக்கும் போட்டி என்பது போல ஒரு பிம்பம் இருந்தாலும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள். இதையை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி இயக்குனர் செல்வபாரதி பேட்டியளித்துள்ளார். இவர் விஜயை வைத்து வசீகரா படம் எடுத்த இயக்குனர் ஆவார். அஜித் நடித்த
 
அஜித்தை கிண்டலடித்து எழுதப்பட்ட வசனம் – பேச மறுத்த நடிகர் விஜய்

Actor vijay and Ajith – அஜித்தை கிண்டலடிப்பது போல எழுதப்பட்ட வசனத்தை நடிகர் விஜய் பேச மறுத்த விவகாரம் தெரியவந்துள்ளது.

சமகாலத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் விஜய் மற்றும் அஜித். திரைத்துறையில் இருவருக்கும் போட்டி என்பது போல ஒரு பிம்பம் இருந்தாலும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

இதையை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி இயக்குனர் செல்வபாரதி பேட்டியளித்துள்ளார். இவர் விஜயை வைத்து வசீகரா படம் எடுத்த இயக்குனர் ஆவார்.

அஜித் நடித்த ‘வில்லன்’ திரைப்படம் வெளியான சமீபத்தில், விஜய்க்கு ஒரு வசனம் எழுதியிருந்தேன் ‘நீ பேர் வச்சாதான் வில்லன். நான் எப்பவுமே வில்லண்டா’ என்பதுதான் அந்த வசனம். இதைக் கேட்ட விஜய், இந்த வசனத்தை நான் பேச மாட்டேன். இது வேண்டாம் என தவிர்த்துவிட்டார் என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News