×

சொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி!

நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பளார்கள் சங்க தலைவராக பொறுப்பு ஏற்றபோது, தான் நடித்து வெளிவரும் படங்களில், ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 என வசூலித்து கிடைக்கும் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்நிலையில், நடிகர் விஷால் நடித்த ‘இரும்புத்திரை’,’துப்பறிவாளன்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இப்படங்களின் ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா ரூ.1வசூலித்து அதனை ஒதுக்கி வைத்தார். அந்தத் தொகையானது தற்போது
 
சொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி!

நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பளார்கள் சங்க
தலைவராக பொறுப்பு ஏற்றபோது, தான் நடித்து வெளிவரும்
படங்களில், ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 என
வசூலித்து கிடைக்கும் தொகை விவசாயிகளுக்கு
வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்வதாகவும்
உறுதி அளித்தார்.

இந்நிலையில், நடிகர் விஷால் நடித்த
‘இரும்புத்திரை’,’துப்பறிவாளன்’ ஆகிய படங்கள் திரைக்கு
வந்தன.

இப்படங்களின் ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா
ரூ.1வசூலித்து அதனை ஒதுக்கி வைத்தார். அந்தத்
தொகையானது தற்போது ரூ.11லட்சமாக சேர்ந்துள்ளது.

சென்னையில் இத்தொகையினை விவசாயிகளுக்கு
வழங்கும் நிகழ்ச்சியும், நடிகர் விஷாலின் 25 வது படங்களில்
நடித்துள்ளதை கொண்டாடும் நிகழ்ச்சியும் ஒன்றாக
நடந்தது.

இவ்விழாவில், நடிகர் விஷால் 30-க்கும் மேற்பட்ட
விவசாயிகளுக்கு அந்த தொகையை பகிர்ந்து அளித்தார்.
மேலும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்
வழங்கினார்.

இதற்காக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விஷாலுக்கு
நன்றி தெரிவித்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News