×

அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர்.அஜித்தை எத்தனை சிவா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கசொல்லுங்கள், ஆனால், கேப் வேண்டும் என்று கடந்த வாரம் பலரும் கூறினார்கள், ஆனால், இது அஜித் காதுகளுக்கு சென்றதா? என்று தெரியவில்லை. சரி, ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது சிவா கடைப்பிடிப்பாரா? இல்லை தல கேட்பாரா? பார்ப்போம். இதில் முக்கியமாக
 
அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர்.அஜித்தை எத்தனை சிவா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கசொல்லுங்கள், ஆனால், கேப் வேண்டும் என்று கடந்த வாரம் பலரும் கூறினார்கள், ஆனால், இது அஜித் காதுகளுக்கு சென்றதா? என்று தெரியவில்லை.

சரி, ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது சிவா கடைப்பிடிப்பாரா? இல்லை தல கேட்பாரா? பார்ப்போம்.

இதில் முக்கியமாக இனி சால்ட் & பெப்பர் லுக்கே வேண்டாம், பார்த்து மிகவும் போர் அடித்துவிட்டது, தயவு செய்து அதை மாற்றுங்கள் என்று கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஹீரோவிற்கு ஓவர் மாஸ் வசனங்கள் வேண்டாம், குறிப்பாக ஹீரோவை புகழும் வில்லன் வேண்டாவே வேண்டாம்.

அதேபோல் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அவசியம் தான், ஆனால், ஒரு ஹாலிவுட் படம் எடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டு, அதில் சேஸிங்கில் செண்டிமெண்ட் காட்சி வைத்தது எங்களுக்கு பிடிக்கவில்லை, இனி வரும் படங்களில் இப்படியெல்லாம் வேண்டாம்.

மேலும், அஜித் ஒரே மேனரிசத்தை பின்பற்றுவது, ஒரே பாணியில் இழுத்து பேசுவது எல்லாம் இனி ஒரு போதும் வேண்டாம்.இதில் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தை அழுத்தமாக வையுங்கள், கடந்த மூன்று படத்திலும் வில்லன் கதாபாத்திரம் தான் மைனஸ் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் அஜித் ரசிகர்கள் மிகவும் நாகரீகமாக தங்கள் கோரிக்கைகளை சிவாவிடம் எடுத்து வைக்க, இது அவர் எண்ணத்திற்கு செல்லுமா? பார்ப்போம்.

From around the web

Trending Videos

Tamilnadu News