×

சீனா வரை செல்லும் அஜித் படம்  – தயாரிப்பாளர் மும்முரம் !

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் திரையிடுவதற்கான வேலைகளை தயாரிப்பாளர் போனி கபூர் செய்து வருகிறார். அஜித்தின் 59 ஆவது படமான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபகாலத்தில் அஜித் நடிப்பில் குறுகிய காலத்தில் உருவானப் படமாக நேர் கொண்ட பார்வை உள்ளது. இந்தப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் இதனை பிரம்மாண்டமாக
 
சீனா வரை செல்லும் அஜித் படம்  – தயாரிப்பாளர் மும்முரம் !

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் திரையிடுவதற்கான வேலைகளை தயாரிப்பாளர் போனி கபூர் செய்து வருகிறார்.

அஜித்தின் 59 ஆவது படமான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபகாலத்தில் அஜித் நடிப்பில் குறுகிய காலத்தில் உருவானப் படமாக நேர் கொண்ட பார்வை உள்ளது. இந்தப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் இதனை பிரம்மாண்டமாக ரிலிஸ் செய்ய தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளது.  சமீபகாலமாக இந்திய படங்களுக்கு சீனாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. அதனால் இந்தப்படத்தைத் தயாரித்துள்ள போனி கபூர் சீனாவில் இந்தப்படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இவரது முந்தையத் தயாரிப்பான மாம் படம் சீனாவில் வெளியாகி வெற்றிகரமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதால் நேர்கொண்ட பார்வை படத்தையும் அங்கு ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் பிகே, பாகுபலி ஆகியப் படங்களின் வரிசையில் நேர்கொண்ட பார்வை சீனாவில் இந்தாண்டு இறுதியில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News