×

அஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி

நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கொடுத்துள்ள பேட்டி விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில், சினிமா வாய்ப்பிற்காக உதயநிதி ஸ்டாலினுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி பல உண்மைகளை கூறப்போவதாகவும் பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது ‘உதயநிதி ஸ்டாலினை தான் நேரில் சந்தித்தது
 
அஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி

நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கொடுத்துள்ள பேட்டி விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில், சினிமா வாய்ப்பிற்காக உதயநிதி ஸ்டாலினுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி பல உண்மைகளை கூறப்போவதாகவும் பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது ‘உதயநிதி ஸ்டாலினை தான் நேரில் சந்தித்தது கூட இல்லை. அது எனது முகநூல் கணக்கு இல்லை. போலி கணக்கில் யாரோ தவறாக பதிவிட்டுள்ளனர்’ என பல்டி அடித்தார். மேலும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருவேன். தமிழ்நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என அவர் கூறினார்.

அதோடு, நடிகர் அஜித்தை எனக்கு தெரியும். அவர் ஒரு சிறந்த மனிதர். ஆனால், விஜய் யாருன்னே எனக்கு தெரியாது எனக் கூறினார். தனது டிவிட்டர் பக்கத்தில் ராயப்பன் வேடம் விஜய்க்கு செட் ஆகவே இல்லை என கிண்டலடித்து அவர் பதிவு போட்டியிருந்தார். தற்போது விஜயை தெரியாது எனக்கூறி விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News