×

தளபதியை ஆஹா… ஓஹோ… என புகழ்ந்து தள்ளிய அர்ஜூன் ரெட்டி ஹூரோ!

தெலுங்கில் பெரிய ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்துக்கு பிறகு, நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘கீதா கோவிந்தம்’. தற்போது, விஜய் தேவரகொண்டா கைவசம் டாக்ஸிவாலா , நோட்டா , டியர் காம்ரேடு என 3 படங்கள் உள்ளது. இதில் ‘நோட்டா’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும்
 
தளபதியை ஆஹா… ஓஹோ… என புகழ்ந்து தள்ளிய அர்ஜூன் ரெட்டி ஹூரோ!

தெலுங்கில் பெரிய ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்துக்கு பிறகு, நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘கீதா கோவிந்தம்’. தற்போது, விஜய் தேவரகொண்டா கைவசம் டாக்ஸிவாலா , நோட்டா , டியர் காம்ரேடு என 3 படங்கள் உள்ளது.

இதில் ‘நோட்டா’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வருகிற அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘தளபதி’ விஜய் பற்றி விஜய் தேவரகொண்டா கூறுகையில், “நான் விஜய் சார் நடித்த படங்களின் காட்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால், இதுவரை அவர் நடித்த எந்த படத்தையும் முழுவதுமாக பார்த்ததில்லை.

விஜய் சாரின் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆகையால், அவர் நடித்த படங்களின் டிரெய்லர் வந்தால் உடனே பார்த்து விடுவேன்” என தெரிவித்தார்.

இதனால், விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News