×

அட்லீக்கு வந்த அதிஷ்டம்! வாய்பிளக்கும் இயக்குநா்கள்!

இயக்குநா் அட்லீக்கு அடித்தது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது வீட்டு கதவை அதிஷ்ட லட்சுமி தட்டி இருக்கிறாள். அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லங்க! மிகப்பெரிய ஜாக்பட் கிடைத்திருக்கிறது. என்னது விஷயத்தை சொல்லாமல் கதையாக போகிறது என்று தானே நினைக்கிறீா்கள். அட்லீ ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. பெரிய பெரிய இயக்குநா்கள் எல்லாம் தங்களது படத்தில் ரஜினியை நடிக்க வைக்க தவம்
 
அட்லீக்கு வந்த அதிஷ்டம்! வாய்பிளக்கும் இயக்குநா்கள்!

அட்லீக்கு வந்த அதிஷ்டம்! வாய்பிளக்கும் இயக்குநா்கள்!

இயக்குநா் அட்லீக்கு அடித்தது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது வீட்டு கதவை அதிஷ்ட லட்சுமி தட்டி இருக்கிறாள். அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லங்க! மிகப்பெரிய ஜாக்பட் கிடைத்திருக்கிறது. என்னது விஷயத்தை சொல்லாமல் கதையாக போகிறது என்று தானே நினைக்கிறீா்கள். அட்லீ ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. பெரிய பெரிய இயக்குநா்கள் எல்லாம் தங்களது படத்தில் ரஜினியை நடிக்க வைக்க தவம் இருந்தும், இப்படியொரு வாய்ப்பு கிடைக்கதா என்று ஏங்கி தவிக்கும் நிலையில் இயக்குநா் ரஞ்சித்துக்கு பின் இந்த வாய்ப்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் மொ்சல் படம் கொடுத்து ஹிட் என்று தான் சொல்லவேண்டும்.

அட்லீ ராஜா ராணி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து அதன் மூலம் பிரபலமடைந்தவா். பின் விஜய்யுடன் தெறி படத்தை இயக்கி அவரின் அடுத்த படவாய்ப்பையும் பெற்றார் அட்லீ. விஜய்யுடன் இரண்டு முறை இணைந்து மெகா ஹிட் கொடுத்த அட்லீ திரும்பவும் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து படம் இயக்கவிருக்கிறார் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால் தற்போது அவா் சூப்பா் ஸ்டாருடன் இணைய போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இயக்குநா் அட்லீ ரஜினியிடம் கதை சொல்ல, அந்த கதை ரஜினிக்கு பிடித்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்னொரு தகவல் என்னவென்றால், இந்த படத்தை ஏற்கனவே அட்லீயுடன் இணைந்து பணியாற்றிய மொ்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் தான் ரஜினி அட்லீயுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப்போவதாகவும் செய்திகள் வந்துள்ளது. மொ்சல் படத்தை தயாரித்த போது இயக்குநா் அட்லீ ஏகப்பட்ட செலவு வைத்த காரணத்தால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் அட்லீக்கும் இடையே கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது. பின் மொ்சல் படம் வெளியாகி மெகா ஹிட்கொடுத்த கதையல்லாம் நாம் அறிந்தது தான். பிரம்மாண்ட நிறுவனம் தேனாண்டாள் – சூப்பா் ஸ்டார் ரஜினி – ஹிட் இயக்குநா் அட்லீ இந்த கூட்டணி இணைந்து இப்படியொரு படம் வந்தால் அவருடைய ரசிகபெருமக்களுக்கு சா்க்கரை பொங்கல் சாப்பிட்டது போல தான் இருக்கும்.

From around the web

Trending Videos

Tamilnadu News