×

பேட்ட வேலனை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டிய தூக்கு துரை!

Petta Vs Viswasam : தமிழில் ‘வீரம், வேதாளம், விவேகம்’ படங்களுக்கு பிறகு ‘தல’ அஜித் – இயக்குநர் சிவா கூட்டணி அமைத்த 4-வது படம் ‘விஸ்வாசம்’, கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் பேபி அனிகா, ஜெகபதி பாபு, யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இதற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே
 
பேட்ட வேலனை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டிய தூக்கு துரை!

Petta Vs Viswasam : தமிழில் ‘வீரம், வேதாளம், விவேகம்’ படங்களுக்கு பிறகு ‘தல’ அஜித் – இயக்குநர் சிவா கூட்டணி அமைத்த 4-வது படம் ‘விஸ்வாசம்’, கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மேலும், முக்கிய வேடங்களில் பேபி அனிகா, ஜெகபதி பாபு, யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இதற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படம் வசூலில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, வசூலில் முதலிடம் பிரபாஸின் ‘பாகுபலி 2’வும், மூன்றாவது இடத்தில் ‘ரஜினியின் ‘2.0’வும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News