×

இளையராஜாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பாரதிராஜா – பிரசாந்த் ஸ்டுடியோவில் பரபரப்பு

இளையராஜா விவகாரம் குறித்து பேச சென்ற பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்ற போது அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இசைஞானி இளையராஜா 40 வருடங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவை இசையமைக்க பயன்படுத்தி வருகிறார். ஆனால், திடீரென அங்கிருந்து அவரை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிறுவனம் அவர் இசையமைத்து வந்த இடத்திற்கு பூட்டு போட்டது. இதனால், இளையராஜாவின் இசைப்பணிகள் முடங்கியது. இந்நிலையில், இளையராஜாவின் நண்பரும் இயக்குனருமான பாரதிராஜா, சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட
 
இளையராஜாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பாரதிராஜா – பிரசாந்த் ஸ்டுடியோவில் பரபரப்பு

இளையராஜா விவகாரம் குறித்து பேச சென்ற பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்ற போது அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இசைஞானி இளையராஜா 40 வருடங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவை இசையமைக்க பயன்படுத்தி வருகிறார். ஆனால், திடீரென அங்கிருந்து அவரை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிறுவனம் அவர் இசையமைத்து வந்த இடத்திற்கு பூட்டு போட்டது. இதனால், இளையராஜாவின் இசைப்பணிகள் முடங்கியது.

இளையராஜாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பாரதிராஜா – பிரசாந்த் ஸ்டுடியோவில் பரபரப்பு

இந்நிலையில், இளையராஜாவின் நண்பரும் இயக்குனருமான பாரதிராஜா, சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட சிலர் இன்று மாலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்றனர். ஆனால், ஸ்டுடியோ நிர்வாகத்தினர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின், அவர்கள் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே சென்று இளையராஜாவிற்கு ஆதரவாக ஸ்டுடியோ நிர்வாகத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News