×

பிகில் பட பாடல் லீக் – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏஜிஎஸ்

Bigil movie song leak – பிகில் படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இப்பாடலை
 
பிகில் பட பாடல் லீக் – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏஜிஎஸ்

Bigil movie song leak – பிகில் படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானதை அடுத்து ஏஜிஎஸ்  நிறுவனம் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இப்பாடலை விஜய் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

விஜய், நயன்தாரா இருவரும் இணைந்து ஆடும் இப்பாடலின் படப்பிடிப்பு தளத்தில் யாரோ இதை பதிவு செய்து லீக் செய்து விட்டனர் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனி இப்படி எதுவும் வெளியாகமால் பார்த்துக் கொள்கிறோம் என பிகில் படத்தில் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News