×

போட்றா வெடிய! ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் ரிலீஸ் தேதி இதோ!

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே கடந்த சனிக்கிழமை வெளியாகி யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது. பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பிகில் படத்திற்கு சென்சார் பணிகள் முடிந்துவிட்டது. படத்தில் ரிலீஸ் தேதியை விரைவில்
 
போட்றா வெடிய! ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் ரிலீஸ் தேதி இதோ!

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே கடந்த சனிக்கிழமை வெளியாகி யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது.

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பிகில் படத்திற்கு சென்சார் பணிகள் முடிந்துவிட்டது. படத்தில் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்’ என பதிவிட்டிருந்தார். எனவே, தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 27ம் தேதி வெளியாகுமா அல்லது அதற்கு முன்பே 25ம் தேதி வெள்ளிகிழமை வெளியாகுமார் என்கிற குழப்பம் விஜய் ரசிகர்களிடையே நீடித்து வந்தது.

இந்நிலையில், பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News