×

சிக்கலில் பி.எஸ்.என்.எல். – 4 நாளில் 1010 கோடி புரட்டுமா ?

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என். எல் தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சிக்கலில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய முதன் முதலில் அரசு சார்பில் தொடங்கப்பட்டன. காலப்போக்கில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தேக்க நிலையை அடைந்துள்ளன. இந்நிலையில் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து இவ்விரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இம்மாதத்துக்கான ஊதியமாக மொத்தமாக 1010
 
சிக்கலில் பி.எஸ்.என்.எல். – 4 நாளில் 1010 கோடி புரட்டுமா ?

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என். எல் தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சிக்கலில் உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய முதன் முதலில் அரசு சார்பில் தொடங்கப்பட்டன. காலப்போக்கில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தேக்க நிலையை அடைந்துள்ளன. இந்நிலையில் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து இவ்விரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இம்மாதத்துக்கான ஊதியமாக மொத்தமாக 1010 கோடி ரூபாய் புரட்ட வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளன. ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News