×

ரஜினியை இப்படி அசிங்கப்படுத்தலாமா? – கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட பட வசனங்களுக்கு பதில் சொல்வது போல் விஸ்வாசம் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் கார்த்திக் சுப்புராஜை கலங்கடித்துள்ளதாம். பேட்ட பட டிரெய்லரில் எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளைங்க, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு.. கொலை காண்டுல இருக்கேன்..கொல்லாம வுடமாட்டேன்’ என ரஜினி பேசியிருப்பார். அதன்பின் வந்த விஸ்வாசம் டிரெய்லரில் “பேரு தூக்குதுரை..ஊரு கொடுவிலார்பாட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்தை வாடா” என அஜித் பேசியிருப்பார். அதேபோல், என்கிட்ட பணம்
 
ரஜினியை இப்படி அசிங்கப்படுத்தலாமா? – கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட பட வசனங்களுக்கு பதில் சொல்வது போல் விஸ்வாசம் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் கார்த்திக் சுப்புராஜை கலங்கடித்துள்ளதாம்.

பேட்ட பட டிரெய்லரில் எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளைங்க, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு.. கொலை காண்டுல இருக்கேன்..கொல்லாம வுடமாட்டேன்’ என ரஜினி பேசியிருப்பார்.

அதன்பின் வந்த விஸ்வாசம் டிரெய்லரில் “பேரு தூக்குதுரை..ஊரு கொடுவிலார்பாட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்தை வாடா” என அஜித் பேசியிருப்பார்.

ரஜினியை இப்படி அசிங்கப்படுத்தலாமா? – கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ்

அதேபோல், என்கிட்ட பணம் இருக்கு. நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன் என வில்லன் கூற, ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ என அஜித் பேசுவதை ரஜினியை குறிவைத்துதான் என சிலர் கொளுத்திவிட்டனர்.

மேலும், பேட்ட, விஸ்வாசம் டிரெய்லரில் இடம் பெற்ற வசனங்களை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூக வலைத்தளங்களில் அஜித், ரஜினி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர். இது பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை மிகவும் பாதித்துள்ளதாம்.

சமீபத்தில் நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்த கொடுத்த போது ‘ரஜினி எவ்வளவு பெரிய ஆள்.. அவரை இப்படி கிண்டலடித்து கேலி செய்து அசிங்கப்படுத்துகிறார்களே’ என புலம்பி கண் கலங்கினாராம். சினிமாவில் இதெல்லாம் சகஜம். படம் வெளியான பின் அனைத்து சரியாகி விடும் என நண்பர்கள் அவரை தேற்றியதாக தகவல் கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News