×

அந்த தலைப்புகளை இனி வைக்க முடியாது – ’Mr. லோக்கல்’ சிவகார்த்திகேயன் ஓபன் டாக் !

மிஸ்டர் லோக்கல் எனத் தலைப்பு வைத்தது ஏன் என நடிகர் சிவகார்த்திக்கேயன் விளக்கம் அளித்துள்ளார். சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப்படம் மே 17 ஆம்
 
அந்த தலைப்புகளை இனி வைக்க முடியாது – ’Mr. லோக்கல்’ சிவகார்த்திகேயன் ஓபன் டாக் !

மிஸ்டர் லோக்கல் எனத் தலைப்பு வைத்தது ஏன் என நடிகர் சிவகார்த்திக்கேயன் விளக்கம் அளித்துள்ளார்.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப்படம் மே 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மிஸ்டர் லோக்கல் என இந்தப் படத்துக்கு  தலைப்பு வைத்தது  குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பியபோது ’ஒருப் படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் போன்ற விளம்பரங்களை வைத்தே படம் ரசிகர்கள் மனதில் நிற்கும். அதனால் படத்தின் தலைப்பே ஒரு பிராண்டாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. தலைப்ப்புப் புரியும்படி கமர்ஷியலாக இருக்க வேண்டியுள்ளது. அதனால் இனிமேல் மனங்கொத்திப் பறவை அல்லது கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பெயர்களை வைக்க முடியாது.

அதனால் தான் மிஸ்டர் லோக்கல் போன்ற தலைப்புகளை வைக்க வேண்டியுள்ளது, அடுத்த படத்துக்கும் ஹிரோ என்றுதான் பெயர் வைத்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News