×

சினிமாதான் என்னையும் பாலாவையும் பிரித்தது – அமீர் ஓபன் டாக் !

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான அமீர் தனது நண்பர் பாலாவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். எல்லாத்தயும் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். அப்போது சினிமாவில் அறிமுகம் ஆகுபவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக சில கருத்துகளை முன்வைத்தார். அவரது பேச்சில் ‘விஜயகாந்த் மதுரையில் சினிமா ஆசையில் சுற்றிக் கொண்டு இருந்தபோது அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவரை ஒரு
 
சினிமாதான் என்னையும் பாலாவையும் பிரித்தது – அமீர் ஓபன் டாக் !

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான அமீர் தனது நண்பர் பாலாவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

எல்லாத்தயும் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். அப்போது சினிமாவில் அறிமுகம் ஆகுபவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக சில கருத்துகளை முன்வைத்தார்.

அவரது பேச்சில் ‘விஜயகாந்த் மதுரையில் சினிமா ஆசையில் சுற்றிக் கொண்டு இருந்தபோது அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவரை ஒரு நட்சத்திரமாக மாற்றியது ராவுத்தர்தான். ஆனால் அவர்கள் இருவரும் கடைசி வரை நண்பர்களாக இருந்தார்களா என்ன?.. அவர்களைப் பிரித்தது இந்த சினிமாதான். அதேப் போல நானும் பாலாவும் ஒன்றாகதான் சென்னைக்கு சினிமா வாய்ப்புத் தேடி வந்தோம். இப்போது நாங்கள் ஒன்றாகவா இருக்கிறோம். அவர் செல்போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. என்னுடையதும் அவரிடம் இருக்காது. எங்கள் நட்பைப் பிரித்தது சினிமாதான். அதனால் சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை. மின்னி மின்னி மறைவதால்தான் நம்மை நட்சத்திரம் என்கிறார்கள். அதனால் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது நம் அருகில் உள்ளவர்களைத் தூக்கி விடவேண்டும். அதற்காகதான் நான் இந்த விழாவில் கலந்துகொண்டேன்’ என உருக்கமாகப் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News