×

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

தலித் வாலிபரை 4 பேர் கடத்தி சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் சங்காலி வாலா எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜக்மாலே சிங். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிங்கு, பிந்தேர் ஆகியோர் இடையே கடந்த அக்டோபர் மாதம் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி ஜாக்மாலே சிங்கை கடத்தி சென்று, ஒரு இடத்தில் கட்டி வைத்து பல
 
சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

தலித் வாலிபரை 4 பேர் கடத்தி சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் சங்காலி வாலா எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜக்மாலே சிங். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிங்கு, பிந்தேர் ஆகியோர் இடையே கடந்த அக்டோபர் மாதம் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி ஜாக்மாலே சிங்கை கடத்தி சென்று, ஒரு இடத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். அவர் தண்ணீர் கேட்ட போது சிறுநீர் கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.

அதன்பின் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாக்மாலே சிங் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

எனவே, இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News