×

மாரி2 ரிலீஸானால் கனா காணாமல் போகும் : முற்றும் தனுஷ் – சிவகார்த்திகேயன் மோதல்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் இடையே நிகழும் பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. மெரினா, மனம் கொத்தி பறவை என இரு படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் மூலமாகவே சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ வரிசை இடம் கிடைத்தது. அதன்பின் தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. இருவருக்கும் பிரச்சனை பலமுறை செய்திகள் வெளிவந்தது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர். தனுஷின் நண்பராகவும், அவரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் இருந்த அனிருத் சிவகார்த்திகேயனோடு நெருக்கமாகி, அவரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து
 
மாரி2 ரிலீஸானால் கனா காணாமல் போகும் : முற்றும் தனுஷ் – சிவகார்த்திகேயன் மோதல்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் இடையே நிகழும் பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

மெரினா, மனம் கொத்தி பறவை என இரு படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் மூலமாகவே சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ வரிசை இடம் கிடைத்தது. அதன்பின் தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. இருவருக்கும் பிரச்சனை பலமுறை செய்திகள் வெளிவந்தது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர்.

மாரி2 ரிலீஸானால் கனா காணாமல் போகும் : முற்றும் தனுஷ் – சிவகார்த்திகேயன் மோதல்

தனுஷின் நண்பராகவும், அவரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் இருந்த அனிருத் சிவகார்த்திகேயனோடு நெருக்கமாகி, அவரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார். இதனால், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்தை தனது எதிரிகளாகவே தனுஷ் பார்க்கிறார் என அவ்வபோது செய்திகள் கசிவதுண்டு…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படம் வருகிற 21ம் தேதி திரைக்கு வருகிறது. இது சிறிய பட்ஜெட் படம். அந்த தேதியில் இப்படத்தை திரையிட தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சங்கத்தின் அனுமதி இல்லாமலேயே 21ம்தேதி தன் படம் மாரி2 வெளியாகும் என தனுஷ் அறிவித்துவிட்டார்.

அப்படி வெளியானால் மாரி 2 படத்திற்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும். ‘கனா’ படம் காணாமல் போகும். இது தனுஷுக்கும் தெரியும். ஆனாலும் அவர் இதில் உறுதியாக இருப்பது சிவகார்த்திகேயன் மீதுள்ள அவருக்குள்ள கோபத்தையே காட்டுகிறது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News