×

‘தர்பார்’ வேற லெவல்… வைரலாகும் ரஜினி 166 ஃபர்ஸ்ட் லுக்..

Darbar First look – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. இப்படம் ரஜினிக்கு 166வது படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு இதுவரை
 
‘தர்பார்’ வேற லெவல்… வைரலாகும் ரஜினி 166 ஃபர்ஸ்ட் லுக்..

Darbar First look – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. இப்படம் ரஜினிக்கு 166வது படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளியாகத நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். தர்பார் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஜினி போலீஸ் வேடத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News