×

தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை: சொல்வது கஸ்தூரி ராஜா

JVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’. கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் நடிகர் தனுஷின்
 
தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை: சொல்வது கஸ்தூரி ராஜா

JVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’. கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப்படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேசுகையில்,

துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே  படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன்.. இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது.. இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது.  அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.  அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க ன்னு விமர்சனம் பண்ணார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம். எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார்..அதனால்தான் இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது”. என்றார்..

From around the web

Trending Videos

Tamilnadu News