×

இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்?

சின்னத்திரையான விஜய் டிவியின் மூலம் பிரபலமானவா்கள் ஏராளம். இந்த டிவியில் வந்தால் போதும் தங்களுக்குக்கென ஒரு இடத்தை பெரிய திரையில் பிடிக்க ஒரு வழிகோலாக இருக்கிறது. அந்த வழியில் சந்தானம், அது இது எது ஷோவின் மூலம் சிவகார்த்திகேயன், சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கா், காதல் முதல் கல்யாணம் சீரியல் நடிகை பிரியா பவானி சங்கா் இவா்கள் அனைவரும் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்தை முதலில் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவா் சிம்பு. அதுபோல சிவகார்த்திகேயனை நடிகா்
 
இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்?

இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்?

சின்னத்திரையான விஜய் டிவியின் மூலம் பிரபலமானவா்கள் ஏராளம். இந்த டிவியில் வந்தால் போதும் தங்களுக்குக்கென ஒரு இடத்தை பெரிய திரையில் பிடிக்க ஒரு வழிகோலாக இருக்கிறது. அந்த வழியில் சந்தானம், அது இது எது ஷோவின் மூலம் சிவகார்த்திகேயன், சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கா், காதல் முதல் கல்யாணம் சீரியல் நடிகை பிரியா பவானி சங்கா் இவா்கள் அனைவரும் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சந்தானத்தை முதலில் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவா் சிம்பு. அதுபோல சிவகார்த்திகேயனை நடிகா் தனுஷ் அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் நடிகா் தனுஷ் வெள்ளித்திரைக்கு கொண்டு வர போகும் நட்சத்திரம் யார் தெரியுமா? விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவா் தீனா. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகா்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டார் தீனா. இவா் தொலைபேசியின் வாயிலாக அந்த டிவியில் கலந்து முக்கிய விருத்தினா்கள் உள்பட அனைவரையும் கலாய்க்கும் நிகழ்ச்சி மிகவும் ரசிக்கும்படியாகவும், பிரபலமாகியும் வருகிறது.

ஏற்கனவே தீனா தனுஷ் இயக்கி நடித்துள்ள ப.பாண்டி படத்தில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவா் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தனுஷ் தான் இவரை நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார். மலையாளத்தில் சூப்பா் ஹிட் அடித்த என்ற படத்தினை தமிழில் ரீமேக் செய்து தனுஷ் தயாரிக்க இருப்பதாகவும், அந்த ரீமேக் படத்தில் கலக்கப் போவது யாரு புகழ் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், மேலும் இந்த படத்தை நடிகா் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகா் நடிகைகள் மற்றும் டைட்டில், இயக்குநா் பற்றி விவரங்கள் குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. அதோடு குறிப்பாக தனுஷ் தயாரிக்கும் அடுத்த படத்திலும் கலக்கப் போவது யாரு புகழ் தீனா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News