×

தெலுங்கில் டப் செய்யப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் படம்!

தமிழில் 2015ல் வெளியான வெற்றிமாறனின் ‘விசாரணை’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கிறது. ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து தமிழில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விசாரணை’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இதனை ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனத்துடன் இணைந்து பிரபல நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார். இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், இயக்குநர் சமுத்திரக்கனி, கிஷோர், ஆனந்தி, முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்கு
 
தெலுங்கில் டப் செய்யப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் படம்!
தமிழில் 2015ல்  வெளியான வெற்றிமாறனின்  ‘விசாரணை’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கிறது.
‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து தமிழில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விசாரணை’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இதனை ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனத்துடன் இணைந்து பிரபல நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.
இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், இயக்குநர் சமுத்திரக்கனி, கிஷோர், ஆனந்தி, முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் டப் செய்யப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் படம்!
இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது. தற்போது, இந்த படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். படத்தை வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News