×

இயக்குனர் விஜயின் திருமணம் – வைரல் புகைப்படம்

Director A.L.Vijay Wedding – இயக்குனர் விஜய்க்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய். மதராச பட்டினம், தெய்வ திருமகள், தலைவா, சைவம், தேவி எனத் தொடர்ச்சியாகப் படஙகளை இயக்கி வருகிறார். தெய்வ திருமகள் மற்றும் தலைவா படத்தில் பணியாற்றிய போது இவருக்கும் அமலாபாலுக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஓராண்டிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். இதன் பின்னர்
 
இயக்குனர் விஜயின் திருமணம் – வைரல் புகைப்படம்

Director A.L.Vijay Wedding – இயக்குனர் விஜய்க்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய். மதராச பட்டினம், தெய்வ திருமகள், தலைவா, சைவம், தேவி எனத் தொடர்ச்சியாகப் படஙகளை இயக்கி வருகிறார். தெய்வ திருமகள் மற்றும் தலைவா படத்தில் பணியாற்றிய போது இவருக்கும் அமலாபாலுக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஓராண்டிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். இதன் பின்னர் இருவருமே இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவில்லை.

இயக்குனர் விஜயின் திருமணம் – வைரல் புகைப்படம்

இந்நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் இப்போது விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா என்ற மருத்துவருடன் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இன்று அவரின் திருமணம் குடும்பத்தாரின் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்தது.

அவர் திருமண கோலத்தில் மணப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News