×

ஜான்வி கபூர் நடித்த ‘தடக்’ படத்தின் 10 நாள் வசூல் தெரியுமா?

ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்துள்ள தடக் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டாவது வாரத்திலும் நல்ல கலெக்சனை அள்ளியுள்ளது. 10 நாளில் 63.39 கோடி வசூலித்துள்ளது. ஷஷாங்க் இயக்கத்தில் இஷான் காட்டெர் -ஜான்வி கபூர் நடித்துள்ள படம் தடக். மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம் பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். சாதி மாறிக் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில்
 
ஜான்வி கபூர் நடித்த ‘தடக்’ படத்தின் 10 நாள் வசூல் தெரியுமா?
ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்துள்ள தடக் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டாவது வாரத்திலும் நல்ல கலெக்சனை அள்ளியுள்ளது.  10 நாளில் 63.39 கோடி வசூலித்துள்ளது.
ஷஷாங்க் இயக்கத்தில்  இஷான் காட்டெர் -ஜான்வி கபூர்  நடித்துள்ள படம் தடக். மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம் பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். சாதி மாறிக் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் வசூல் இரண்டாவது வாரத்திலும் நன்றாக இருந்துள்ளதாம். கடந்த வெள்ளிக்கிழமை 2.61 கோடியும், சனிக்கிழமை 2.61 கோடியும், ஞாயிறு அன்று 5.20 கோடியும் வசூலாகியுள்ளதாம். ஒட்டுமொத்தமாக  ₹ 63.39  கோடி வசூலாகி உள்ளதாம். இது தொடர்பாக  பிரபல பாலிவுட் பட விமர்சகர் தருண் ஆதார்ஷ்  டுவிட்டரில் கூறியுள்ளார்..

From around the web

Trending Videos

Tamilnadu News